முதல்வர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அடையாளம் தான் எடப்பாடி: ஸ்டாலின் விமர்சனம்..

  0
  1
  MK Stalin

  புதுச்சேரி, காமராஜ் நகரில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் ஜான் குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

  புதுச்சேரி, காமராஜ் நகரில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் ஜான் குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஸ்டாலின், ஏற்கனவே நடந்த நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் ஜான் குமார் வெற்றி பெற்றதால் அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கு கை கொடுத்த ஜான் குமார் இப்போது கைச்சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று கூறி வாக்கு சேகரித்தார். 

  MK Stalin

  அதனை தொடர்ந்து, தமிழகத்தில் நேரடியாக பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. அதனை எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. முதல்வர் பதவி பறிபோகி விடும் என்ற பயத்தில் ஆளுநர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடி மூலம் செயல்படுத்த நினைக்கும் பா.ஜ.க ஆட்சியை எதிர்த்துத் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொண்டுள்ளார். ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எடுத்துக் காட்டு, ஒரு முதல்வர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி தான் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.