முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடத்த போகிறேன்: போலீசை ஆட்டம் காண வைத்த தொலைபேசி அழைப்பு!

  0
  10
  எடப்பாடி பழனிசாமி

  காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ நேற்று மதியம்  இளைஞர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

  சென்னை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

  edappadi

  காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-ஐ நேற்று மதியம்  இளைஞர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய அந்த இளைஞர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு போனை துண்டித்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு  அறைக்கு வந்த அழைப்பு எண்ணை  வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் போனில்  மிரட்டல் விடுத்த நபர், திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த ரகமதுல்லா எனத் தெரியவந்தது.

  arrested

  இதையடுத்து இது தொடர்பாகத் தில்லை நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ரகமதுல்லாவை போலீசார் கைது செய்தனர். ரகமதுல்லா பாஸ்ட்புட் கடையில் வேலைபார்த்து வந்ததாகவும், அவரை வேலையிலிருந்து நீக்கியதால்  மன உளைச்சலில் இருந்த அவர் முதல்வரை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரகமதுல்லாவிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.