முதல்ல இணைப்பாங்க, கடைசியில முதலாளி நண்பர்களுக்கு விற்று விடுவார்கள்- மத்திய அரசை தாக்கும் ராகுல் காந்தி

  0
  1
  ராகுல் காந்தி

  முதல்ல இணைப்பாங்க, அப்புறம் பெரிய நஷ்டத்தை காட்டுவாங்க கடைசியில தரை ரேட்டுக்கு முதலாளித்துவ நண்பர்களுக்கு விற்று விடுவார்கள் என பி.எஸ்.என்.எல்.- எம்.டி.என்.எல். நிறுவனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  தொலைத்தொடர்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டும் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களின் வருவாயில் பெரும் பகுதி தனது பணியாளர்களின் சம்பளமாக சென்று விடுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் நஷ்ட கணக்கை காட்டி வருகின்றன. 

  பி.எஸ்.என்.எல்.

  இதனையடுத்து பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியாருக்கு தாரைவார்க்கப்படும் என பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான புத்துயிர் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதனை காங்கிரசின் முன்னாள் தலைவர் விமர்சனம் செய்து டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

  பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பு

  பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பு தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பக்கத்தில், முதல்ல நிறுவனத்தை இணைப்பார்கள், அடுத்து மோசமாக நிர்வாகம் செய்வார்கள், பின்பு பெரிய நஷ்டத்தை காட்டுவார்கள் கடைசியில் முதலாளித்துவ நண்பர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விடுவார்கள் என கடுமையாக தாக்கி பதிவு செய்துள்ளார்.