முதலைக்கு ஊத்திக்கொடுக்கும் இளைஞர்கள் ! வைரலான வீடியோ !

  0
  3
  crocodile

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் முதலைக்கு பீர் ஊற்றிக் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

  புளோரிடா மாகாணத்தில் திமோதி மற்றும் நோவா ஆஸ்போர்ன்  என்ற பெயர் கொண்ட இளைஞர்கள் உயிரினங்கள் வாழும் இடத்திற்கு சென்று தங்களது பொழுதை கழித்துள்ளனர். அப்போது அங்கு அவர்கள் ஒரு முதலையை சீண்டிவிட ஏற்கனவே பசியில் இருந்த அந்த முதலை கோபத்தில் அந்த இளைஞரின் கையை கடித்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த திமோதி என்ற அந்த இளைஞர் தன் கையில் வைத்திருந்த பீர் மதுபானத்தை அந்த முதலையின் வாயில் ஊற்றி குடிக்க வைத்துள்ளார். ஏற்கனவே பசியில் இருந்ததால் அந்த பீரை குடித்துவிட்டு சற்று தள்ளாடியபடியே அந்த முதலை அங்கிருந்து சென்றுவிட்டது.

  crocodile

  இதை உடன் இருந்த இளைஞர் நோவா வீடியோவில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டார். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த வீடியோ தற்போது புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்திற்கு கிடைத்துள்ளது. இதை அடுத்த அந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இருவரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டனர். தனது கையை கடித்ததால்தான் கோவத்தில் அதற்கு மதுபானம் ஊற்றியதாகவும், மற்றபடி சித்ரவதை செய்யவில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தனர். பின்னர் இருவரையும் எச்சரித்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்று தவறுகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.