முதலீட்டாளர்களை தொடர்ந்து சந்தோஷத்தில் மிதக்க வைக்கும் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது…

  0
  2
  மும்பை பங்குச் சந்தை

  கடந்த சில தினங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது, அது இன்றும் தொடர்ந்தது. சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது.

  அமெரிக்கா-சீனா இடையிலான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் தணிந்தது. உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இது போன்ற சர்வசேத நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

  அமெரிக்கா-ஈரான் கொடிகள்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஹீரோமோட்டோகார்ப், ஐ.டி.சி., என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் டெக் மகிந்திரா உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  ஹீரோமோட்டோகார்ப்

  இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,468 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,037 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.58 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

  இண்டஸ்இந்த் வங்கி

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 92.94 புள்ளிகள் உயர்ந்து 41,952.63 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,362.30 புள்ளிகளில் முடிவுற்றது.