முதலீட்டாளர்களை சந்தோஷத்தில் திளைக்க பங்கு வர்த்தகம்…. ரூ.7.86 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 2,476 புள்ளிகள் உயர்ந்தது…..

    20
    பங்கு வர்த்தகம்

    இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. சென்செக்ஸ் 2,476 புள்ளிகள் உயர்ந்தது.

    கடந்த ஏழு வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்ததால் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைவாக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொற்றுநோய் பரவுவது குறைந்துள்ளதாக தகவல். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட அனைத்து நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது. 

    இண்டஸ்இந்த் வங்கி

    மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,843 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 539 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 194 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.116.36 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆக இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.7.86 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

    சென்செக்ஸ்

    இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,476.26 புள்ளிகள் அதிகரித்து 30,067.21 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 708.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,792.20 புள்ளிகளில் நிலைகொண்டது.