முதலீட்டாளர்களுக்கு ரூ.3.75 லட்சம் கோடி லாபம்…… சென்செக்ஸ் 1,028 புள்ளிகள் உயர்ந்தது….

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,028 புள்ளிகள் உயர்ந்தது.

  சீனாவின் மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை பல தரநிர்ணய நிறுவனங்கள் குறைத்த போதிலும், கோவிட்-19க்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பல நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருந்ததால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். மேலும் உலக நாடுகளின் பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஏற்றமாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

  சீனாவின் தொழில்துறை

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் சன்பார்மா உள்பட 26 நிறுவன பங்குகளின விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, மாருதி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டைட்டன் ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  ஜி.டி.பி.

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,524 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 771 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.113.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஓரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.75 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

  ஓ.என்.ஜி.சி.

  இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,028.17 புள்ளிகள் உயர்ந்து 29,468.49 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 316.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8,597.75 புள்ளிகளில் முடிவுற்றது.