முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உயிருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி இருக்கும் – உதயநிதி! 

  0
  1
  Udhayanithi

  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்தே பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்தே பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
   
  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திமுக சார்பாக விக்கிரவாண்டியில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டியில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

   உதயநிதி ஸ்டாலின்

  விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறிய ஓபிஎஸ் இதுவரை விசாரணை ஆணையத்திற்கு ஒரு முறை கூட வரவில்லை.  முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாத இந்த அட்சியில் சாமானியர்களுக்கு எப்படி இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும். தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்தே பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார்” எனக்கூறினார்.