முதன்முறையாக தமிழில் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

  0
  13
  ராஜகோபால் தீர்ப்பு

  இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்  உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் மொழிபெயர்த்து பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

  புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு, முதன்முறையாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

  sc

  இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்  உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் மொழிபெயர்த்து பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இதில் தமிழ் மொழி இடம்பெறாததால் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.

  president

  அதன்படி  உச்ச நீதி மன்ற கூடுதல் கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மொழிபெயர்ப்பு செய்யப் பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார். அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த், பிராந்திய மொழிகளிலும்  தீர்ப்புகள் வெளியாகவேண்டும்’ என்றார். 

  sc

  இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, முதன்முறையாகத் தமிழிலும் வெளியாகியுள்ளது. அதாவது ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதன்முறையாகத் தமிழில் வெளியாகியுள்ளதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.