முட்டை  சாப்பிடாம இருந்தா.. இவ்ளோ பிரச்சினைகள் வருமா?

  0
  2
  முட்டை

  விருந்து விசேஷம்னா வாழையிலை விரிச்சு ஒரு பிடி பிடிக்கிறது தான் நம்மள்ல பலபேருடைய சுபாவம். ஆனால் பெரும்பாலான பெண்களும், குழந்தைகளும் சமீப காலங்களாக அசைவ உணவு என்றாலே, பொரித்த சிக்கன் வகைகளை மட்டுமே விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ கடல் உணவுகள் மட்டும் தான் ஆரோக்கியமானவை என்று பிறவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

  விருந்து விசேஷம்னா வாழையிலை விரிச்சு ஒரு பிடி பிடிக்கிறது தான் நம்மள்ல பலபேருடைய சுபாவம். ஆனால் பெரும்பாலான பெண்களும், குழந்தைகளும் சமீப காலங்களாக அசைவ உணவு என்றாலே, பொரித்த சிக்கன் வகைகளை மட்டுமே விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ கடல் உணவுகள் மட்டும் தான் ஆரோக்கியமானவை என்று பிறவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். மாறி வரும் கால சூழலில் முட்டையை எல்லாம் சைவ உணவுகளின் பட்டியலில் சேர்த்து ரொம்ப வருஷங்களாயிடுச்சு.

  eggs

  அதனால, கூடுமானவரை உங்கள் குழந்தைகளுக்கு முட்டையை சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள். முட்டை சாப்பிடாமல் தவிர்த்து வந்தால், நிறைய சத்துக்களை நாம் தவிர்த்து விடுகிறோம். முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
  ஒரு முட்டையில், தரமான புரதச்சத்து மட்டும் ஆறு கிராம் வரையில் இருக்கிறது. வெய்யிலில் விளையாடும் குழந்தைகளை எல்லாம் பார்ப்பதே அரிது. பாதிக்கும் மேலாகவே டிவி முன்பாகவும், சூரிய வெளிச்சம் இல்லாத அறைகளில் செல்போன் விளையாட்டிலும் மூழ்கி விடுகிறார்கள். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

  eggs

  அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். அதே சமயம் முட்டையில் இருக்கும் லூடின் மற்றும் சியாங்தின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமக்கு கண் நோய்கள் வராமலும் கண்களில் புரை ஏற்படாமலும் தடுக்கும். உடல் எடை அதிகரிக்கும் என்கிற கவலையில் இருப்பவர்கள் கூட முட்டை சாப்பிடலாம். ஏனெனில், உடல் எடையைக் குறைப்பதற்கும் முட்டை  உதவி செய்கிறது. தினசரி உணவில் தாராளமாக முட்டையை  சேர்த்துக் கொள்ளலாம்.