முட்டாள்தனத்திற்கு எப்படி தீர்வு கண்டுபிடிக்க போகிறோம்? – ஹர்பஜன் சிங் குமுறல்

  0
  92
  Harbhajan singh

  நாம் கொரோனாவுக்கு ஒரு மருந்தை கண்டுபிடிப்போம். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு எப்படி ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க போகிறோம்?” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

  ஜெய்ப்பூர்: நாம் கொரோனாவுக்கு ஒரு மருந்தை கண்டுபிடிப்போம். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு எப்படி ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க போகிறோம்?” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

  பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்திகளையும், விளக்குகளையும் ஏற்றி வைத்தனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக மக்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஆனால் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தால் ஹர்பஜன் சிங் தனது மனக்குமுறலை டிவிட்டரில் வெளிப்படுத்தினார்.

  ஜெய்ப்பூரில் உள்ள வைசாலி நகர் பகுதியில் காலியாக உள்ள ஒரு நிலத்தில் தீப்பிடித்த வீடு ஒன்று பட்டாசுகள் அதன் கூரையில் விழுந்ததால் தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த ஒரு பத்திரிகையாளரின் வீடியோவை ரீ-ட்வீட் செய்த ஹர்பஜன், “நாம் கொரோனாவுக்கு ஒரு மருந்தை கண்டுபிடிப்போம். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு எப்படி ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க போகிறோம்?” என்று அந்த பதிவில் குறிப்பிட்டார்.