முடி உதிர்வதைத் தடுப்பதற்கான நிரந்தர தீர்வு இது தான்!

  0
  34
  முடி உதிர்வு

  பாஸ்ட் புட் கலாசாரத்தில் மூழ்கி போன உணவு முறை, பதினைந்து, இருபது வயதுகளிலேயே ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் காரணமாக  தற்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், தலை முடி உதிர்வு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் தலைமுடி உதிரும் பிரச்சனையை அப்படியே சாதாரணமாக  எடுத்துக் கொண்டால் நாளடைவில் அது தலை வழுக்கையாக மாறி விடுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.

  பாஸ்ட் புட் கலாசாரத்தில் மூழ்கி போன உணவு முறை, பதினைந்து, இருபது வயதுகளிலேயே ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் காரணமாக  தற்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், தலை முடி உதிர்வு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் தலைமுடி உதிரும் பிரச்சனையை அப்படியே சாதாரணமாக  எடுத்துக் கொண்டால் நாளடைவில் அது தலை வழுக்கையாக மாறி விடுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. தலை வழுக்கையாக மாறுவதற்கு பெரும்பாலும் சொல்லப்படுகிற காரணமாக மரபணுக்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசு, ரசாயனங்கள் அதிகளவில் கலக்கப்பட்ட ஷாம்பு  மற்றும் எண்ணெய்களை உபயோகப்படுத்துவது, உடல்ரீதியான மன உளைச்சல், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை இருக்கின்றன. 

  hair loss

  இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள எண்ணெய்களை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையில் விரைவாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி, தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
  அதற்கு முன்பாக, தலைமுடி எப்படி உதிர்கிறது என்பதைப் பார்ப்போம். டிஹைடிரோடெஸ்டோஸ்டெரோன் (டிஎச்டி) மற்றும் கொலாஜன் போன்றவைகள் நம் உடலில் அதிகரிப்பதால் நாம் தலை முடியை அதிகமாக இழக்க நேரிடுகிறது.  தலையில் முடி வேர்கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. இதனால் தலைமுடி பொலிவை இழந்து, முடி மெலிதாகி பின்பு அனைத்து முடியும் இழக்க நேரிடும்.
  இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ குணமுள்ள எண்ணெய்களை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழுக்கை தலையில் விரைவாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். முதல் வேலையாக, முடி உதிர்கிறதே என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதிகளவில் கவலைப்பட்டால், அதிகளவில் முடிகள் உதிர ஆரம்பிக்கும். எப்போதும் மனதை ரிலாக்ஸாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருங்கள்.

  hair loss

  தேவையற்ற பதட்டத்தையும், பரபரப்பையும், டென்ஷனையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை அதிகளவில் தண்ணீர் உட்கொள்ள துவங்குங்கள். சத்தாண உணவு பழக்கத்திற்கு மாறுங்கள். அதிகளவில் கீரைகள், கறிவேப்பிலை போன்றவைகளை உட்கொள்ள துவங்குங்கள். இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தால், உடனடியாக முடி உதிரும் வேகத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக முற்றிலும் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.