முடிந்தது பங்கீடு..! பாமகவுக்கு இவ்வளவு தொகுதிகளா..? கடுங்கோபத்தில் விஜயகாந்த்..!

  0
  4
  எடப்பாடி பழனிசாமி

  பாமக முதலில் தனக்கு 30 சதவிகிதம் இடங்கள் வேண்டுமெனக் கேட்டது. ஆனால் பேசிப் பேசி அதில் பாதி இடங்களுக்கு பாமகவை சம்மதிக்க வைத்துவிட்டனர் அதிமுகவினர்.

  அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தலைமைக் கழகத்தில் இருந்து சென்ற உத்தரவில், ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 சதவிகித இடங்களில் அதிமுகதான் போட்டியிட வேண்டும். மற்ற 30 சதவிகிதம் இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கூட்டணிக் கட்சியினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

  வடமாவட்டங்களில் பாமக, தேமுதிக ஆகிய இரு கூட்டணிக் கட்சிகள் கடுமையாக டிமாண்ட் வைக்கக் கூடியவை. இங்கே மட்டும்தான் அதிமுகவுக்கு சிற்சில பிரச்சினைகள். தென்மாவட்டங்களில் பாமக இல்லை, தேமுதிகவுக்கும், பாஜகவுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.Ramadoss

  பாமக முதலில் தனக்கு 30 சதவிகிதம் இடங்கள் வேண்டுமெனக் கேட்டது. ஆனால் பேசிப் பேசி அதில் பாதி இடங்களுக்கு பாமகவை சம்மதிக்க வைத்துவிட்டனர் அதிமுகவினர். எத்தனை சதவிகிதம் என்று பேசி முடித்த பின்னரே, எந்தெந்த இடங்கள் என்று முடிவெடுத்தனர். சில மாவட்டங்களில் பாமகவுக்கு 15 சதவிகிதம், என்று  குறைந்தது போல தேமுதிக 20 சதவிகிதம் என்ற நிபந்தனையை ஆரம்பத்தில் விதித்தது.

  அவர்களிடமும் பேசி 10 சதவிகிதம் என்ற அளவில் சம்மதிக்க வைத்துவிட்டது அதிமுக. பாஜகவுக்கு 10 என்ற அளவில் பேசி முடிக்கப்பட்டது. தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 12 சதவிகிதம் வரை பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் உட்கார்ந்து கூட்டணிக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் பேசி முடித்திருக்கிறார்கள்.