முடிந்தது இலவச பயணம்!  ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா! 

  0
  1
  JIO

  ஜியோ எண்ணிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

  ஜியோ எண்ணிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறுகிய காலக்கட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முன்னணி நிறுவனமாக உள்ளது. அதாவது 28 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜியோ சிம் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது முதலில் ஒரு வருடத்துக்கு இலவச வாய்ஸ் மற்றும் இணைய சேவையை வழங்கிவந்தது. அதன்பிறகு மாதம் 149 ரூபாயும், மூன்று மாதத்திற்கு 399 ரூபாயும் கட்டணமாக வசூலித்தது. இந்த கட்டணத்தை செலுத்தினால் அளவில்லா இணைய சேவையும், அழைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன, இந்நிலையில் தற்போது தனது உண்மையான முகத்தை காட்ட ஜியோ தொடங்கிவிட்டது. 

  Jio

  ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் ரீசார்ஜ் செய்யும் அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. லேண்ட்லைனுக்கு அழைத்தாலோ, ஜியோ டூ ஜியோ சிம்முக்கு அழைத்தாலோ கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.