முக்கிய புள்ளி கொடுத்த கிளுகிளுப்பான பார்ட்டி: கைதான அரசு அதிகாரிகள்!?

  0
  2
  டான்ஸ் பார் (மாதிரிபடம்)

  டான்ஸ் பாரில் நடந்த சோதனையில்  அரசு  அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  மும்பை: டான்ஸ் பாரில் நடந்த சோதனையில்  அரசு  அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  dance

  தெற்கு மும்பையில் கோலபா என்ற இடத்தில்  தொழிலதிபர் ஒருவர் அரசு அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களுக்கு பிரத்யேக பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்.  இது குறித்துத் தகவலறிந்த மும்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சட்டவிரோதமாகச் சிலர் மது விருந்தோடு, டான்ஸ் பார்ட்டியும்  நடத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து டான்ஸ் பாரில் இருந்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதில்  9 பேர் ஹோட்டல் பணியாளர்கள் என்றும் 6 பேர் மும்பை கார்ப்ரேஷனில் பணிப்புரியும் மூத்த அதிகாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது. 

  arrest

  இவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.