முகினை உருகி உருகி காதலித்த அபிராமி எடுத்த திடீர் முடிவும் வாழ்த்தும்…!

  22
   அபிராமி

  பிக் பாஸில் சக போட்டியாளரும் முகினை உருகி உருகி காதலித்தவருமான அபிராமி முகினுக்கு தன் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

  பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகினுக்கு அபிராமி வாழ்த்து கூறியுள்ளார்.

  பிக் பாஸ்  3  நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதி போட்டிக்கு 4 பேர் தேர்வான நிலையில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகினுக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

  mugen

  இந்நிலையில் பிக் பாஸில் சக போட்டியாளரும் முகினை உருகி உருகி காதலித்தவருமான அபிராமி முகினுக்கு தன் வாழ்த்துகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில், ‘நீ ஜெயிக்க பிறந்தவன்டா. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீ தனித்துவமானவன். எப்போதும் நாம் நல்ல நண்பர்கள்’ என்று குறிப்பிட்டு முகினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

   

  நல்ல நண்பர்கள் என்ற  பதிவை கண்ட ரசிகர்கள் சிறந்த ஜோடி என்றும் முகினை விட்டுங்க  அபிராமி அவர் அவங்க லவ்வரோட  சேரட்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.