முகவர்கள் கூட ஓட்டுப்போடலையா? அது எப்படி ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை- டிடிவி தினகரன்

  0
  2
  ttv

  எங்கள் முகவர்கள் கூடவா எங்களுக்கு ஒட்டு போடவில்லை. ஒரு ஓட்டு கூட வராமல் போனது எப்படி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 

  எங்கள் முகவர்கள் கூடவா எங்களுக்கு ஒட்டு போடவில்லை. ஒரு ஓட்டு கூட வராமல் போனது எப்படி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். 

  சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர் பார்த்தோம். ஆனால் ஏன் இந்த தோல்வியென்று போக போக தெரியும். மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். பல்வேறு வாக்குச்சாவடிகளில் அமமுகாவுக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. தேர்தல் முகவர்கள் கூடவா எங்களுக்கு வாக்களிக்காமல் இருந்திருப்பார்கள்.  10 பேர் எங்கள் கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு போவதால் கட்சிக்கு எந்த பாதிப்பு இல்லை

  சசிக்கலாவை 28ம் தேதி சந்திக்க உள்ளேன். நம்பிக்கையில்லா தீர்மானம் நிச்சயமாக வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது ஆனால் கண்டிப்பாக வரும்” எனக்கூறினார்.