முகமது ஷமிக்கு இடம் இல்லை; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து !!

  0
  2
  இந்தியா, நியூசிலாந்து

  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

  ind v nz

  கடந்த மே மாதம் 30ம் தேதி துவங்கிய 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 
  இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. 

  ind vs nz

  இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 
  இன்றைய போட்டிக்கான இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹலும், நியூசிலாந்து அணியில் டிம் சவுத்திக்கு பதிலாக பெர்குஷானும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 
  இந்திய அணி; 
  கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ். 
  நியூசிலாந்து அணி; 
  மார்டின் கப்தில், ஹென்ரி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாட்னர், லோகி பெர்குஷான், மேட் ஹென்ரி, டிரண்ட் பவுல்ட்.