முகத்தில் கரியை பூசிவிட்டு,அதை மையினால் இட்ட திருஷ்டி பொட்டு என்கிறார்கள்! – நடிகர் பார்த்திபன்

  0
  6
  parthiban

  நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் முழுவதிலும் ஒரே கதாபாத்திரம் தோன்றும் படி இந்த படத்தை இயக்கி, நடித்தார்.

  நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் முழுவதிலும் ஒரே கதாபாத்திரம் தோன்றும் படி இந்த படத்தை இயக்கி, நடித்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல், இந்த படம்  2 தேசிய விருதுகளையும் பெற்றது. ஆனால் விகடன் விருதில் தேர்வாகியிருந்தும் விருது கிடைக்கவில்லை. இதனால் கோபடைந்த அவர், 2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின்  விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டே” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஆனந்த விகடன், பார்த்திபனின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம் எனக்கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டது. 

  இந்நிலையில் அந்த கட்டுரையை புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் வெளியிட்ட  பார்த்திபன் , “விகடன் பெருந்தன்மையுடன் என் கோபத்தை குளிர்வாக வெளிப்படுத்திய மேன்மை அவ்வருத்தத்தை Story ஆக எழுத வேறு சொன்னார்கள்.அவ்வளவு விரைவில் குறைவதாக இருப்பின் என் ஆதங்கத்தின் பெயர் அசிங்கம்.முகத்தில் கரியை பூசிவிட்டு,அதை மையினால் இட்ட திருஷ்டி பொட்டு என்கிறார்கள்! மெத்த சிறப்பு!நன்றி” என தெரிவித்துள்ளார்.