மீ டூ இயக்கம் ஆரம்பிச்சு பேசினாலும் தப்பு ;படம் எடுத்தாலும் தப்பா!?

  0
  2
  ரித்திகா சிங்

  பாலியல் வன்முறை பற்றி பேசும் Me Too திரைப்படத்தில் ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் வசனங்கள் மற்றும் தலைப்பு ஆகிய காரணங்களுக்காக தணிக்கைக் குழு இதனை நிராகரித்துள்ளது.

  பாலியல் வன்முறை பற்றி பேசும் Me Too திரைப்படத்தில் ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் வசனங்கள் மற்றும் தலைப்பு ஆகிய காரணங்களுக்காக தணிக்கைக் குழு இதனை நிராகரித்துள்ளது.

  சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவரின் அடுத்த படம் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இவர் Me Too என்ற படத்தில் நடித்து முடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கப்பட்டது Me Too இயக்கம். சமூக வலைதளங்களில் Me Too என்ற ஹாஷ்டாக்கின் மூலம் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறை பற்றி யார் வேண்டுமானாலும் பதிவிடலாம். அவர்களுக்கு நீதி கேட்டு இந்த இயக்கம் குரல் கொடுக்கும்.

  ரித்திகா சிங் நடித்துள்ள மீ டூ படம் பாலியல் வெறிபிடித்தவனின் மனநிலை பற்றி முக்கியமாக பேசுகிறது. ஹர்ஷ் வர்தன் இந்த படத்தை இயக்கி முடித்து 7 மாதங்கள் ஆகிறதாம், தணிக்கைக் குழு இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் Me Too எனும் படத்தின் தலைப்பு ஆகிய காரணங்களுக்கா படத்தை நிராகரித்துள்ளது. அதனால் இதன் தயாரிப்பாளர் சாஜித் குரேஷி நீதிமன்றத்தை நாடி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்.