“மீண்டும் வருவேன்; மக்களுக்கு நல்லது செய்வதற்காக மீண்டு வருவேன்” : கேப்டன் ரிட்டன்ஸ்!

  0
  5
   விஜயகாந்த்

  நாளடைவில் அவரின் கட்சி சறுக்கலை  நோக்கி சென்று விட்டது. தற்போது  விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறியுள்ளார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் கட்டிப்பறந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன் பிறகு அரசியலில் களமிறங்கிய அவர் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

  ttn

  இருப்பினும் உடல்நிலை காரணமாக கட்சி பணிகளில் சரியாக விஜயகாந்த் ஈடுபடாமல்  இருக்க, நாளடைவில் அவரின் கட்சி சறுக்கலை  நோக்கி சென்று விட்டது. தற்போது  விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறியுள்ளார்.

  ttn

  இந்நிலையில் விஜயகாந்த் – பிரேமலதா தம்பதி இன்று தங்களின் 29 ஆவது திருமணநாளை கொண்டாடுகின்றனர். அதே சமயம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியும்  தேமுதிக தலைமை அலுவலகத்தில்  இன்று நடைபெற்றது.

  tn

   அப்போது பேசிய விஜயகாந்த், ‘நிச்சயமாக வருவேன், மீண்டும் வருவேன்; மக்களுக்கு நல்லது செய்வதற்காக மீண்டு வருவேன்’ என்று கூறியுள்ளார்.