மீண்டும் லாஸ்லியாவுக்காக சாண்டியிடம் மோதிய கவின்!

  0
  2
  கவின் - சாண்டி

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும் வெற்றி பெற்றார்கள். மேலும் நேற்று நடந்த  டாஸ்கில் முகின் மற்றும் சேரன் வெற்றி பெற்றனர்.  

  kavin

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.அதில், புதிய டாஸ்க்கில்  சாண்டி லாஸ்லியாவை தள்ளிவிட கவின் சாண்டியிடம் மோதுகிறார். அதற்கு சாண்டி  ரொம்ப பண்ணாதடா என்று சொல்ல, யார் ரொம்ப பண்ணா என்று மீண்டும் மல்லுக்கட்டுகிறார். வேணும்னு யாரும் பண்ணலடா அத புரிஞ்சிக்கோடா என்று சாண்டி  பேச, நான் தான் பார்த்துட்டு இருந்தேனே என்று கவின் சொல்ல, தர்ஷன் கேம்ல அப்படி படத்தான் செய்யும் என்று சாண்டிக்கு  ஆதரவாக பேசுகிறார். அதற்கு சாண்டி எல்லாத்துக்கும் ஓவர் பண்ணுறான் இவன் என்று யதார்த்தமாக சொல்ல, எப்போ நான் உன்கிட்ட  ஓவரா பண்ணிருக்கேன் என்று மீண்டும் கவின் கொந்தளிக்கிறார்.

   

  பிக் பாஸ் வீட்டில் இதுநாள் வரை கவினுக்கு ஆதரவாக எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில வாரமாக லாஸ்லியாவுக்காக கவின் சாண்டியிடம் சண்டை போடுவது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாகியுள்ளது.