மீண்டும் மைக்கை கழட்டி எறிந்த வனிதா! உச்சக்கட்ட கடுப்பில் ரசிகர்கள் 

  0
  1
  வனிதா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். வந்த உடனே தனது நரதர் வேலையை தொடங்கி நன்றாக இருந்த வீட்டிற்குள் பூகம்பத்தை உண்டாக்கினார். அதைத்தொடர்ந்து இந்த வார தலைவராக வனிதா தேர்வாகியுள்ளார். தலைவர் என்பதால் தன்னை யாரும் நாமினேட் செய்யமுடியாது என்று மீண்டும் தனது ராஜதந்திர வேலைகளை ஆரம்பித்துள்ளார். 

  இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வனிதா நேற்று கவினுடன் நாமினேஷன் டாஸ்க் நடைபெற்ற வாக்குவாதம் குறித்து மீண்டும்  காட்டப்பட்டுள்ளது. அப்போது பிக் பாஸ் ரூல்ஸை மீறி இரண்டாவது முறையாக மைக்கை கழட்டி இந்த கேமை விளையாடமாட்டேன் என்றார்.

  உடனே கவின் மற்றும் சாண்டி, அவளுக்கு ஒன்று தெரியாது. சரியான லூசு என்று கமெண்ட் செய்வது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த வாரம் மீண்டும் வனிதாவால் பல கலவரங்கள் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.