மீண்டும் பூதாகரம் எடுக்கும் பாலியல் தொல்லை பிரச்சனைகள் ! எச்.ஓ.டி.க்கு எதிராக ஸ்டிரைக் !

  0
  1
  மாதிரி படம்

  தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்தவுடன், அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை “இப்படித்தாங்க தண்டனை தரணும். அப்பதான் இனிமேல் பொண்ணுங்க பக்கம் திரும்பி பாக்க மாட்டாங்க” பெண் மருத்துவர் விவகாரம் படிப்பறிவற்ற ஏழைகளுக்கு அல்லது செய்திகளை படிக்காதவர்களுக்கு தெரியாது என எடுத்துக்கொண்டாலும். நாடெங்கும் முக்கி பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந் செய்தி கதவை தட்டியாவது சென்று சேர்ந்திருக்கும்.

  telangana

  என்கவுண்ட்டர் போட்டு 2 நாட்கள் ஆகவில்லை பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக முதுநிலை மருத்துவருக்கு எதிராக மீரட்டில் போராட்டம் தொடங்கி உள்ளது. 
  உத்தரப் பிரதேசம் மீரட்டில் செயல்பட்டு வரும் லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் கபில் அங்கு பணிபுரியும் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது. பெண் மருத்துவர் கபிலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

  fir

  இதை அடுத்து மாணவியுடன் பயிலும் மாணவர்கள் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி தலைவர் சமரசம் செய்து ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் மருத்துவரை துன்புறுத்திய மருத்துவரை கைது செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தள்ளனர்.

  protest

  இது குறித்து பேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் இந்த விவகாரம் தொடர்பாக தெளிவாக விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.