மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மூன்று போட்டியாளர்கள்! 

  0
  1
  பிக் பாஸ்

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். 

  இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த சீசன்னில் ஏற்கனவே வெளியேறிய அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஹவுஸ் மேட்ஸ் சந்தோஷத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். 

  இது ஒரு பக்கம் இருக்க உள்ளே நுழைந்த உடனே சாக்ஷி, ஷெரினிடம் ‘இந்த விளையாட்டில் நீ தான் ஜெயிக்க வேண்டும் என்று சொல்வது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.