மீண்டும் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்…. ரூ.1.78 லட்சம் கோடி நஷ்டம்…. சென்செக்ஸ் 674 புள்ளிகள் வீழ்ச்சி..

  0
  4
  முகேஷ் அம்பானி

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 674 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

  நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. 2020ம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 5.5 சதவீதம் குறையும் மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. 1946ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டில்தான் அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஆஸ்திரேலியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

  கொரோனா வைரஸ்

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் டெக் மகிந்திரா உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, டைட்டன், ஸ்டேட் வங்கி மற்றும் மாருதி சுசுகி உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  சன்பார்மா

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,137 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,103 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.108.50 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.78 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

  ஆக்சிஸ் வங்கி

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 674.36 புள்ளிகள் குறைந்து 27,590.95 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 170 புள்ளிகள் சரிந்து 8,083.80 புள்ளிகளில் நிலை கொண்டது.