மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்ட நக்மா! அரசியலை விட்டு விலகுகிறாரா !?

  0
  3
  Nagma ttn

  நடிப்பே வேண்டாம் என்று சொந்த ஊருக்கே போய் செட்டிலானவரை காங்கிரஸ் கட்சி அழைத்து அரசியல் வாதியாக அறிமுகம் செய்து வைத்தது

  சென்னை: ‘கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…அத கூடக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா’ என்று இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரபு தேவாவோடு கெட்ட ஆட்டம் போட்டு கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்தவர் ஜோதிகாவின் அக்கா நக்மா!

  அதன் பிறகு அவர் காட்டில் அடை மழைதான்.தமிழ் சினிமா தொடங்கி சவுத் இந்தியன் லாங்குவேஜ் அத்தனையிலும் டாப் ஹீரோக்களின் சாய்ஸ் இவர்தான். எந்த வேகத்துக்கு மேலே போனாரோ அதே வேகத்தில் கீழே இறங்கியதும் காலத்தின் கட்டாயம்.

  nagma

  நடிப்பே வேண்டாம் என்று சொந்த ஊருக்கே போய் செட்டிலானவரை காங்கிரஸ் கட்சி அழைத்து அரசியல் வாதியாக அறிமுகம் செய்து வைத்தது.அவரும் இந்தியா முழுக்க வளம் வந்து காங்கிரஸின் கொள்கையை கொண்டு சேர்க்கப் பார்த்தார்.தமிழ் நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக பதவி கொடுத்து,கொடுத்த வேகத்திலேயே அந்த பதவியை பறித்துவிட்டது.

  nagma

  அதன் பிறகு உப்புச் சப்பில்லாத  ஒரு பதவியைக் கொடுத்து வட மாநிலத்திற்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் தலைமை.அதனால் அரசியலே வேண்டாம் என்ற மன நிலையில் இருந்த நக்மாவுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார்.

  nagma

  இந்த முறை அவர் ரீ எண்ட்ரி கொடுக்கப் போவது தமிழில் அல்ல தெலுங்கில்! திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுனன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.இது குறித்து நக்மா சொல்லும் போது’மீண்டும் சினிமாவில் நடிக்கிறதில் மகிழ்ச்சியாக இருக்கேன்.நல்ல கதையாக இருந்தால் எந்த மொழியாக இருந்தாலும் நடிக்க ரெடி!’ என்று உற்சாகமாக சொல்லியிருக்கிறார்.

  அப்போ…அரசியல்!? முழு நேர நடிப்பு மட்டும்தானாம்!