மீண்டும் தி.மு.க-வுக்குத் தாவும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்! – ஏற்பாடுகள் தீவிரம்

  0
  4
  raja

  அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

  அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் தி.மு.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

  a

  ஜெயலலிதாவின் 1991-96 அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வந்தவர் இவர். அதன் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்து, தி.மு.க-வில் இணைந்து, அ.தி.மு.க-வுக்குத் தாவி தற்போது எந்த கட்சியிலும் இல்லாமல் தனியாக உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எம்.பி சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறி தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்தார்

  ops

  .தற்போது மீண்டும் தி.மு.க-வுக்கு திரும்பிவிடத் திட்டமிட்டுள்ளார். வர உள்ள சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ-ஆக இப்போதே முயற்சி செய்து வருகிறார். இதனால் தி.மு.க-வில் வருகிற 20ம் தேதி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தி.மு.க -வில் ராஜ கண்ணப்பன் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.