மீண்டும் திறக்கப்படும் கேசினோ தியேட்டர்: முதல் படமே சும்மா பட்டய கிளப்பப் போது’ல? 

  0
  1
  கேசினோ

  கேசினோ தியேட்டர் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சென்னை: கேசினோ தியேட்டர் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சென்னை ரிச்சி தெரு அருகேயுள்ள புதுப்பேட்டைச் சாலையில் அமைத்துள்ளது கேசினா தியேட்டர். 1941ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட இந்த கேசினோ திரையரங்கம் ஆரம்ப காலத்தில் வெறும் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.  பிறகு 1950களின் தான் முதல்முதலாக கேசினோ தியேட்டரில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி படங்களும் திரையிடப்பட்டன. 1971ம் ஆண்டிலிருந்து மீண்டும் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன.  

  அதைத்தொடர்ந்து நாட்கள் நகர நகர கேசினோ தியேட்டரில் தமிழ் தவிர்த்து, இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு தெலுங்கு படம் வெளியானது. 

  தற்போது ஒரு மாத காலமாக மீண்டும் தியேட்டர் சீரமைக்கப்பட்டுவருகிறது. அதில் பார்வையாளர் வசதியாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் மரச்சேர்கள் அனைத்தும் குஷன் சேர்களாக மாற்றப்படுகின்றன. அனேகமாக வரும் ஆகஸ்ட் 2ம் வாரத்தில் இந்த வேலை எல்லாம் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 

  casino

  இந்த நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. அதனால்  அன்றைய தினமே தியேட்டரை திறக்க வாய்புயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் உருச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது.