மீண்டும் டென்னிஸில் களமிறங்குகிறார் சானியா மிர்சா..!

  0
  4
  sania mirza

  33 வயதான சானியா மிர்சா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டென்னிஸில் மீண்டும் களமிறங்குகிறார்

  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை பெற்று சாதனை படைத்தவர். இவர் கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

  ttn

  அவரின் திருமணத்திற்குப் பிறகு டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்தார். அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சானியா மிர்சா குழந்தை வளர்ப்பில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி, உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். 

  ttn

  இந்நிலையில், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடக்கவிருக்கும் சர்வதேச ஹாபர்ட் போட்டியில் தான் பங்கேற்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டே டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வருவதாகவும் நேற்று அறிவித்தார்.

  saniya

  அதனைத் தொடர்ந்து, தாம் தற்போது உடல்தகுதியுடன் இருப்பதாகவும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் இந்த போட்டிகளுக்கு முன்பாக அடுத்த மாதம் மும்பையில் நடக்கவுள்ள ஐ.டி.எப். போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 33 வயதான சானியா மிர்சா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டென்னிஸில் மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.