மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் வைகைப்புயல் வடிவேலு!

  0
  22
  வடிவேலு

  நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.. 

  சென்னை: நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.. 

  தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து தன் வசம் வைத்துள்ளவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எந்தசூழ் நிலையிலும் அவர் நடித்த காமெடிக் காட்சிகள் மிகச் சரியாகப் பொருந்த முடிகிறது. அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் உலகம் முழுவதும் பரவிய நேசமணி கேரக்டர் தான். 

  இவருக்கும், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்திடையே இம்சை அரசன் 24 ம் புலிகேசி  பட பிரச்சனையால் வடிவேலு படத்தில் நடிப்பதை தவரித்துவிட்டு சற்று ஒதுங்கியுள்ளார். இவரின் நகைச்சுவை படத்தில்  இல்லாதது குறையாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 

  vadivelu

  அதனால் தற்போது மீண்டும் வடிவேலு சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். ஆம்… இயக்குநர் சுராஜ் வடிவேலுவைக் கதாநாயகனாக வைத்து முழுநீள காமெடி இயக்கவுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் வரும்  செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. 

  இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்,’கொஞ்ச நாள் அமைதியா இருப்போம் என்று தன் நடிக்காம இருந்தேன். ஆனால், இந்த சினிமா என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் ஒதுக்காது. என்னை சார்ந்த எல்லோருக்கும் அது தெரியும். எனது அடுத்த பட வேலைகளைச் செப்டம்பர் இறுதியில் அறிவிக்கப்போகிறேன். அந்த அறிவிப்பே ரொம்ப சுவாரசியமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். மீண்டும் வடிவேலுவின் நகைச்சுவையை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.