மீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.!!

  0
  21
  ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்

  டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் பிளஸ் இருசக்கர வாகனங்கள் புதிய வடிவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிவிஎஸ் நிறுவனம், இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனமான ஸ்கூட்டி பெப் விற்பனையின் புதிய உச்சத்தை தொட்டது.

  டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் பிளஸ் இருசக்கர வாகனங்கள் புதிய வடிவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

  tvs scooty pep

  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிவிஎஸ் நிறுவனம், இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனமான ஸ்கூட்டி பெப் விற்பனையின் புதிய உச்சத்தை தொட்டது.

  ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஸ்கூட்டி பெப் மாடல்கள் விற்பனையில் மந்தம் காண்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது: இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபடும் மற்ற நிறுவனங்கள் தங்களது ஸ்கூட்டர் மாடல்களை அதிக அளவில் மார்க்கெட்டிங் செய்து விற்று வருவதே ஆகும்.

  இந்நிலையில் ஸ்கூட்டி பெப் தயாரிப்பில் டிவிஎஸ் நிறுவனம் 25 ஆண்டுகளை எட்டியதற்காக ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல்களில் புதிய வடிவமைப்பை கொடுத்து மீண்டும் விற்பனையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ளது.

  புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல்கள் கோரல் மேட் மற்றும் அக்வா மேட் போன்ற இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுமட்டுமல்லாது ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல் 3டி எம்ப்லெம், புதிய கிராஃபிக் மற்றும் டெக்ஸ்ச்சர் சீட் ஆகியனவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  tvs scooty pep

  மேலும், 87.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு,  4.9 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 5.8 என்.எம். டார்க் செயல்திறனை கொண்டுள்ளது. 

  முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், மொபைல் சார்ஜிங் சாக்கெட், சைடு ஸ்டான்டு அலாரம் ஆகியவை கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

  இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடலின் விலை எக்ஸ்ஷோரூம் விலைப்படி, 44,300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5000 ரூபாயை முன்பணமாக செலுத்தி எடுத்துச் செல்லலாம் எனவும் டிவிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.