மீண்டும் இணையும் ரஜினி-வடிவேலு காம்போ?; ஆனா ஒரு கண்டிஷன்

  0
  1
  rajinikanthvadivelu

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமானால் வடிவேலுவுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி மீண்டும் இணைய வேண்டுமானால் வடிவேலுவுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  தமிழ் சினிமாவில் அனைத்து தலைமுறையும் ரசிக்கும் வகையில் காமெடி டிராக்கில் கலக்குபவர் நடிகர் வடிவேலு. மீம் மேக்கர்களின் அரசனாக திகழும் வடிவேலு, சமீபகாலமாக திரைப்பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரசாரம் செய்து பட வாய்ப்புகளை பறிக்கொடுத்து அதிலிருந்து மீண்டு வந்தார்.

  பின்னர் ‘புலிகேசி’ திரைப்பட விவகாரத்தில் சிக்கிய வடிவேலு, இன்னும் அந்த பிரச்னையில் இருந்து மீளாமல் ரெட் கார்ட் பெற்று திரைப்படங்களில் நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற வடிவேலு, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.

  pulikesi

  அப்போது இருவரும் மனம் விட்டுப்பேசி, விரைவில் நாம் இணைந்து நடிக்கலாம் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால், புலிகேசி உள்ளிட்ட பிரச்னைகளை முடித்துக் கொண்டு வாருங்கள் என்ற நிபந்தனையயும் சூப்பர் ஸ்டார் முன்வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டுள்ள வடிவேலு, புலிகேசி பட பிரச்னைகளை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.