மீண்டும் இணைந்தது ரம்யா நம்பீசன்- சிபிராஜ் கூட்டணி 

  0
  1
   ரம்யா பாண்டியன்

  சத்யா படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக இணைந்துள்ளார். 

  சென்னை: சத்யா படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக இணைந்துள்ளார். 

  நடிகர் சிபிராஜ் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டில் வெளியான படம் சத்யா. இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருந்தார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுவும் இந்த படத்தில் இடப்பெற்ற யவ்வனா பாடல் ரசிகர்கள் மத்தியில் அமகோ வரவேற்பை பெற்றதால் மீண்டும் இந்த ஜோடி இணைந்து படம் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

  இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் ஆசை படி மீண்டும் இந்த ஜோடி ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.   ‘ரேஞ்சர்’ என்று பெயரிட்டுள்ள இந்த படத்தை  தரணிதரன் இயக்குகிறார்.இதில் சிபிராஜ் வனத்துறை அதிகாரியாக நடித்துவருகிறார். சென்ற வருடம் மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்கவாடா காட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட அவ்னி என்ற புலியின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகவுள்ளது.

  ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.