மீண்டும் ஆந்திராவில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு மருமகள்: உற்சாகத்தில் தொண்டர்கள்!?

  0
  7
   ரோஜா

  ஆந்திர தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். 

  ஆந்திரா:  ஆந்திர தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். 

  மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

  ec

  ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதில் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்., 141 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதனால் ஆளுங்கட்சியான சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி  ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த அமோக வெற்றியையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகிறார்.

  roja

  இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே அதே தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக இருக்கும்  இவர்  பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றவர். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை  சூடியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவரான ரோஜாவுக்கு  அவர்  தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி கிடைக்கக் கூட வாய்ப்பு இருப்பதாக  அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.