‘மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்’ : ப.சிதம்பரம் – வைரமுத்து சந்திப்பு!

  11
  ப.சிதம்பரம் - வைரமுத்து

  கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்ட அவருக்கு  106 நாட்களுக்கு பிறகு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

  கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  

  ttn

  கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்ட அவருக்கு  106 நாட்களுக்கு பிறகு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

  இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சிதம்பரத்தின் வீட்டிற்கே  நேரில் சென்று  நலம் விசாரித்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டர்  பக்கத்தில், ‘இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

  ttn

  முன்னதாக கடந்த 3 ஆம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை டெல்லியில் சென்று  சந்தித்த வைரமுத்து அவரை கண்டதும் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.