மிஸ்டர் அஜித் இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்… மீண்டும் சீண்டும் கஸ்தூரி! 

  0
  6
  கஸ்தூரி

  நடிகை கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் சிலர் கொச்சையான வார்த்தையில் பேசி இழிவுபடுத்திகின்றனர். அதற்கு அவரும் ட்விட்டர் பதிலடி கொடுத்துள்ளார். 

  நடிகை கஸ்தூரியை அஜித் ரசிகர்கள் சிலர் கொச்சையான வார்த்தையில் பேசி இழிவுபடுத்திகின்றனர். அதற்கு அவரும் ட்விட்டர் பதிலடி கொடுத்துள்ளார். 

  திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி வார்த்தைப் போரைத் தொடங்கினார்.

  கஸ்தூரி

  கஸ்தூரி குறித்து ஆபாசமாக பதிவிட்ட ரசிகர்களின்  மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளுடன், ‘மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க’ என்று குறிப்பிட்டிருந்தார்.  ஆபாசமாக ட்விட்டரில் பதிவிட்ட அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிடமாட்டார்கள் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

  Kasthuri Tweet

  இந்த வார்த்தைப் போர் தீவிரமடைந்த நிலையில், தற்போது கஸ்தூரி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “அஜித் சார், கவனியுங்கள். இது ரசிகர்களுக்கிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, மேலும் பல பெண்களும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.