மில்லியன் கணக்கில் அசத்தும் சுற்றுலா துறை! இன்று உலக சுற்றுலா தினம்!

  0
  13
  உலக சுற்றுலா தினம்

  பள்ளி பருவங்களில், வருடத்திற்கு ஒரு முறை `சுற்றுலா’ என்கிற வார்த்தை நம்மை அதிக அளவில் கவர்ந்திருக்கும்.  அதற்கு முக்கிய காரணம் பயணமும் நேரமும் தான். இன்று பல இடங்களுக்கு சென்றாலும் பள்ளியில் சென்ற சுற்றுலா பயணம் என்றும் பசுமை மாறாத நினைவுகளாக தான் உள்ளது அனைவருக்கும். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் நீ சுற்றுலா சென்ற இடங்களைப் பற்றி எழுது என்று வகுப்பறையின் கேள்வி தாள்களில், குழந்தைகளும் மனப்பாடம் செய்தவற்றை அப்படியே எழுதி வைக்கிறார்கள்.

  tour

  சுற்றுலா, கண்களைக் கட்டிக் கொண்டு யானையைத் தொட்டு, தடவி அனுபவிப்பதைப் போல இருக்க கூடாது. அதன் மகத்துவத்தை அனுபவித்தால் தான் விவரிக்க முடியும். 
  சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், கலாசாரம், வரலாறு என்பதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கிலும் உலக முழுவதும் இன்று  செப்டம்பர் – 27  உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
  இன்று உலகின் மிகப்பெரிய துறையாக விளங்குவது, சுற்றுலாதுறை தான்.  அது மட்டுமின்றி உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? உண்மைதான் போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாக சுற்றுலா தான் இருக்கிறது. வெறும் பாலைவனத்தை வைத்துக் கொண்டு துபாய் சுற்றுலாவில் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. சின்னஞ்சிறிய நாடான சிங்கப்பூர், எந்தவிதமான பெரிய வளமும் இல்லாமல் சுற்றுலாவில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் மிளிர்கிறது.

  tourism

  சில நாடுகளில் சுற்றுலா துறையை நம்பி தான் நாட்டின் பொருளாதாரம் இருக்கின்றது. 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கிறது
  உலகத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நாடாக பிரான்ஸ் திகழ்கின்றது. இந்த நாட்டிற்கு வருடத்திற்கு சுமார்  82.6 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளர் சுற்றுலா பயணிகளாக வந்து செல்கின்றனர். இரண்டாவது சுற்றுலா நாடாக  அமெரிக்கா திகழ்கின்றது  சுமார் 77.5 மில்லியன் மக்கள் வருடத்திற்கு வருகை புரிகிறார்கள். மூன்றாவது நாடான ஸ்பெயினில் வருடத்திற்கு 75.6 மில்லியனும், மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு  35.8 மில்லியன் கணக்கிலும் மக்கள் சுற்றுலாவிற்காக பணத்தை செலவு செய்கிறார்கள்.

  – உமாமகேஸ்வரி (செங்காந்தாள்)