மிரட்டும் போக்கை கைவிட வருமானவரித்துறை முடிவு! நிர்மலா சீதாராமனின் மாஸ்டர் பிளான்

  0
  4
  நிர்மலா சீதாராமன்

  வருமான வரி செலுத்துவோரிடம் நட்புடன் அணுக வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் வருமான வரித்துறையினர் பொதுமக்களை மிரட்டும் தொனியில் நடந்துக்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அகமதாபாதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மறைமுக வரித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே ஆகியோர் இப்பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

  income

   

  வாடிக்கையாளரின் முகமறியாத வகையில் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை கையாள்வது குறித்தும் நட்புடன் அணுகுவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி வருமான வரித்துறையினர் மக்களிடம் நடந்துக்கொள்ளும் முறை மற்றும் தகவல் பரிமாற்றம்  ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது ஒருவர் வரி செலுத்த தவறினாலோ, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாகோ அவர்களை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பியும் வழக்குத் தொடர்ந்தும் வரியை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த தொனி மாற்றப்படவுள்ளாது. 

  குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் அதிகாரிகள் இனிமேல் குறிப்பிட்ட செலவுக் கணக்கில் சேர்க்கப்பட்டதா, வரி செலுத்தப்பட்டதா என அன்பான முறையில் கேள்விக்கேட்பார்கள்.  மிகப் பெரிய அளவில் பணப் பரிமாற்றம், முதலீடு, உள்ளிட்டவை குறித்து வருமான வரி கணக்கில் தாக்கல் செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் சேமிப்பு செயலிகள் மூலமாக முன்கூட்டியே அவகாசம் அளித்து, குறுஞ்செய்திகள் மூலமாக நினைவுபடுத்தப்படும் என்றும்  அதிகாரிகள் கூறுகின்றனர்.