மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா…. 1,618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி….. தொற்று நோய்க்கு பலி 52ஆக உயர்வு…

  0
  6
  ஜியோ

  நேற்றைய நிலவரப்படி, தொற்று நோயான கொரோனா வைரசுக்கு இதுவரை 1,618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 52 பேர் பலியாகி உள்ளனர்.

  உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் தீவிரவமாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

  கொரோனா வைரஸ்

  நம் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்தது. மேலும், சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மருத்துவ பணியாளர்கள்

  நம் நாட்டில் நேற்று மட்டும் 315 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 52 என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,618ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.