‘மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா’ இந்தியாவில் 78 ஆயிரத்தை எட்டியது பாதிப்பு!

  0
  6
  corona virus

  கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸால் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பினும், இதற்கு உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

  ttn

   

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 78,003 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 26,235 பேர் இதிலிருந்து குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2,549 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் 25,922 கொரோனா நோயாளிகளுடன் முதல் இடத்திலும், குஜராத் மாநிலம் 9,267 கொரோனா நோயாளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தமிழ் நாடு 9,227 நோயாளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.  அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழகத்தில் தான் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.