மின்சாரத்துக்கும் ஆப்பு வச்ச கொரானா-மின் உபயோகத்தில் கடும் வீழ்ச்சி …

  0
  6
  India’s electricity demand

  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு தொடங்கியது   முதல்  இந்தியாவின் மின்சார பயன்பாடு மிகக் குறைந்துள்ளது  என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன, நான்கு மாதங்களில் முதல் முறையாக மாதாந்திர மின் நுகர்வு குறைந்துள்ளது.

  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு தொடங்கியது. முதல் இந்தியாவின் மின்சார பயன்பாடு மிகக் குறைந்துள்ளது  என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன, நான்கு மாதங்களில் முதல் முறையாக மாதாந்திர மின் நுகர்வு குறைந்துள்ளது.
  செவ்வாய்க்கிழமை தொடங்கிய மூன்று வார பணிநிறுத்தத்தின் முதல் நாளான மார்ச் 25 அன்று தேசிய மின்சார தேவை 2.78 பில்லியன் யூனிட்டுகளாக சரிந்தது.

  factory

  இது மார்ச் முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு நாம் பயன்படுத்தும்  சராசரியான  3.45 பில்லியன் யூனிட்டுகளை விட 20% குறைவு என அரசாங்க தரவுகளின் ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வு கூறுகிறது .
  இந்த குறைவான மின்நுகர்வு  தொடர்ந்தால் இந்தியாவின் மின்சார நுகர்வு அக்டோபர் மாதத்திலிருந்து  மிக வேகமாக வீழ்ச்சியடையும்., ஏற்கனவே  பொருளாதார மந்தநிலை காரணமாக 12 ஆண்டுகளில் மின் பயன்பாடு மிகவும்  சரிந்திருந்தது.

  electricity-station

  மின்சார பயன்பாடு தேசிய அளவில் குறைந்திருந்தாலும், சில மாநிலங்களில் மின் நுகர்வு சற்று உயர்ந்தது, இது பணிநிறுத்தம் அங்கு முழுமையாக இல்லாமலிருக்கலாம் அல்லது, அதிக வெப்பநிலை காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.