மிக மிக அவசரம் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்! 

  0
  2
  Miga Miga Avasaram team

  பல தடைகளை தாண்டி வெளியான மிக மிக அவசரம் படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

  சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இதில் சீமான், ஸ்ரீபிரியங்கா, முத்துராமன், ஹரிஷ், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் போலீசார் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், ஸ்ரீ பிரியங்கா பெண் காவலராக நடித்திருக்கிறார். 

  Miga Miga Avasaram

  இந்நிலையில், இப்படத்தை பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்தார். முன்னதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு நாயகி ஸ்ரீ பிரியங்காவை சந்தித்து நேரில் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.