மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார் ஹோட்டல்: ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்!

  0
  2
  விஜய் சேதுபதி

  ஹோட்டலில் பல்வேறு ஸ்டைலில் அசத்தலாக உள்ள ரஜினியின் புகைப்படங்கள், அவர் பேசிய மாஸ் பஞ்ச் டயலாக்குகள் ஆகியவை சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. 

  நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள ஹோட்டல் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. 

  rajini

  சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அவரவர் அவர்களுக்குத் தகுந்தாற்போல ரஜினியின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்  துபாயில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். . ‘ரஜினிகாந்த் சவுத் இந்தியன் ஹோட்டல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் பல்வேறு ஸ்டைலில் அசத்தலாக உள்ள ரஜினியின் புகைப்படங்கள், அவர் பேசிய மாஸ் பஞ்ச் டயலாக்குகள் ஆகியவை சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது.

   

  rajini

  உதாரணமாக,  ‘கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்.. நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்’, கதம் கதம் உள்ளிட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த ஹோட்டலுக்குவாடிக்கையாளர்களின் வருகை எப்போதும் அதிகமாகவே உள்ளதாம். இந்த ஹோட்டல் ரஜினி ரசிகர்களுக்கில்லை கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.