மாஸ்க் தயாரிக்கும் இயந்திரங்களை மொத்தமாய் ஆட்டையைப் போட திட்டம்! – டி.ஐ.ஜி-க்கு தொடர்பா?

  0
  3
  Mask Private Limited

  கோவையில் மாஸ் தயாரிக்கும் இயந்திரத்தை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று டி.ஐ.ஜி மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கொரோனா பீதி காரணமாக மாஸ்க் தேவை அதிகரித்துள்ளது.

  கோவையில் மாஸ் தயாரிக்கும் இயந்திரத்தை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று டி.ஐ.ஜி மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கொரோனா பீதி காரணமாக மாஸ்க் தேவை அதிகரித்துள்ளது. மாஸ்க் தயாரிப்புக்கும் இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகி வந்தன. இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை யாரும் பெரிதாக கண்டுகொண்டது இல்லை. கொரோனா பீதி காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாஸ்க் தேவை அதிகரித்ததால் எல்லோரின் பார்வையில் கோவையில் உள்ள மாஸ்க் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது விழுந்தது.

  mask

  இந்த நேரத்தில் நிறைய மாஸ்க் தயாரித்து சம்பாதிக்கலாம் என்று நினைத்த முக்கிய புள்ளி ஒருவர் கோவையில் உள்ள ஶ்ரீசாஸ்தா இன்ஜினீயரிங் என்ற நிறுவனத்திடம் இயந்திரம் தயாரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் உங்களுக்கு முன்பு பலரும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். வரிசைபடிதான் தருவோம் என்று கூறியுள்ளனர். உடனே அந்த முக்கிய புள்ளி தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மூலம் மிரட்டல் விடுத்து இயந்திரம் ஒன்றை டெலிவரியும் எடுத்துக்கொண்டார்.
  ஆனாலும் ஆசை அடங்கவில்லை, தயாரிக்கும் இயந்திரங்கள் எல்லாம் தனக்கே வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். ஶ்ரீசாஸ்தா நிறுவனம் மறுக்கவே, போலீஸ் உயர் அதிகாரி மூலம் அழுத்தம் தரத் தொடங்கியுள்ளார். சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீசாஸ்தா நிறுவனத்துக்குள் வந்து அமர்ந்துகொண்டு இயந்திரங்கள் வேறு யாருக்கும் டெலிவரியாகிவிடாமல் தடுக்கும் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

  mask

  வேறு வழியின்றி இது பற்றி ஶ்ரீசாஸ்தா நிறுவனம் சார்பில் கோவை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய கலெக்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்துக்குள் இருப்பதை உறுதி செய்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடவே, இன்ஸ்பெக்டர் வெளியேறியுள்ளார். உண்மையில் போலீஸ் டி.ஜ.ஜி-க்கும் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. 
  சினிமாவில் வருவது போல நிறுவனத்துக்குள்ளேயே அமர்ந்து கொண்டு இன்ஸ்பெக்டர் அராஜகத்தில் ஈடுபட்டது, அவருக்கு துணையாக டி.ஜ.ஐ ஒருவர் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.