மாஸாக சிலம்பம் சுற்றும் சிஎஸ்கே வீரர்கள்: வைரல் வீடியோ!

  0
  1
  சிலம்பம் சுற்றும் சிஎஸ்கே வீரர்கள்

  சிஎஸ்கே வீரர்கள் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

  சென்னை:  சிஎஸ்கே வீரர்கள் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

  csk

  ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. சி.எஸ்.கே அணி மற்றும் தோனிக்கு சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனாலோ என்னவோ, சென்னை அணிக்கு பெரும்பாலும் வெற்றி முகமாகவே உள்ளது. இதைப் போலவே சென்னை அணி வீரர்கள் எது செய்தாலும் அதை சிஎஸ்கே ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். 

   

  அந்த வகையில்  சிஎஸ்கே வீரர்கள்  சிலர் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக ஹர்பஜன் சிங்,   வேட்டி அணிந்துகொண்டு முதலில் ஒரு கை, அடுத்ததாக இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பத்தைச் சுற்றி அதகளப்படுத்துகிறார்.

  இதிலிருந்து அவர் சிலம்பாட்டத்தைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. ஹர்பஜன் சிங்கை பொறுத்தவரையில்  ஐபிஎல் தொடங்கியது முதலே தமிழ்ப் பட வசனங்களைப் பேசுவது, தமிழில் ட்வீட் போடுவது என்று தமிழனாகவே மாறிவருகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். 

  csk

  முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் தமிழில் எழுதி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  இதையும் வாசிக்க: பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு; ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ அபராதம்!