மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜி நீக்கம்… அந்த ட்வீட் தான் காரணமா ?

  0
  2
  ராஜேந்திர பாலாஜி

  விருதுநகர் மாவட்டத்தின் அதிமுக செயலாளர் பதவியிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  representative image

  கட்சிப்பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதால், ராஜேந்திர பாலாஜி தற்போதுவரை அமைச்சர் பதவியில் தொடர்ந்து வருகிறார். அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.. ஆனால் மார்ச் 22 அன்று அவர் டிவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவே காரணம் என கூறப்படுகிறது. ராஜேந்திர பாலாஜி  பதிவிட்டக் கருத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தாக்கும் விதத்தில் இருந்ததால், கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. தான் பதிவிட்ட கருத்தை சிறிது நேரத்திலேயே ராஜேந்திர பாலாஜி நீக்கி விட்டார்.

  rajenthira twitter

  சமீபகாலமாக, ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தை விமர்சித்து ஊடகங்களில் பேசிவருகிறார். கடந்த ஆண்டில் மோடியை டாடி என்றும் கூறியிருந்தார். அவருடைய கருத்துகள் அடிக்கடி  சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பல முறை கட்சித் தலைமை அவருக்கு அறிவுறுத்தியும் ராஜேந்திர பாலாஜி மாத்திக் கொண்டதாக தெரியவில்லை.

  அதனால் ஒரு வார்னிங் கொடுப்பதற்காகவே அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.