மார்ச்- 5 ஆம் தேத் தலைவர் 169 பூஜையா? படக்குழுவினர் வெளியிட்ட தகவல்

  0
  10
  ரஜினிகாந்த்

  இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது  திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.

  இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது  திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.  டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் 169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் ரஜினியுடன் கமல் இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக பேச்சுகள் உலா வந்தன. 

  rajini- kamal
  கமல்ஹாசனுக்கு 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் பின்னாட்களில் தனது ஸ்டைலான நடிப்பால் சூப்பர் ஸ்டாரானார்.  அதன்பின் இருவரும் இணைந்து படம் நடிக்கவே இல்லை. பல ஆண்டுகளாக இணையாத இந்த ஜோடி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாக இருவரது ரசிகர்களும் கொண்டாடிவந்தனர். இந்த படத்தின் பூஜை வரும் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக செய்திகள் கசிந்தன. ஆனால் மார்ச்-5-ம் தேதி அப்படி எந்த பூஜையும் நடைபெறவில்லை என படக்குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.