மார்கழி மாத தனுசு ராசி பலன்கள்

  0
  6
  dhanusu rasi palangal

  தனுசு ராசிக்கு  ஜோதிட அடிப்படையில் மார்கழி மாதம் எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

  தனுசு ராசிக்கு 1-ல் சூரியனும் சனியும் 3, 4-ல் செவ்வாயும் 11, 12-ல் சுக்கிரனும் 12, 1-ல் புதனும்  12-ல் குருவும் 8-ல் ராகுவும்  2-ல் கேதுவும் அமர்ந்துள்ளனர். மார்கழி மாதத்தில் செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

  dhanusu rashi palangal

  தனுசு ராசிக்கு மாதத் தொடக்கத்தில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். 

  கணவன் மற்றும் மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் மாதம்.

  dhanusu rashi palangal

  அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

  ஷேர் மூலம் ஆதாயம் வரும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்குத் தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும்.

  புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்.மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

  தனுசு லக்ன பலன்கள்:  பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

  மூல நட்சத்திரம் :  புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும்.

  பூராடம் நட்சத்திரம் :  . சுபச் செலவுகள் அதிகரிக்கும் மாதம்.

  உத்திராடம் நட்சத்திரம் :  நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

  சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 25,26 

  அதிர்ஷ்ட எண்கள் : 3,7

  dhanusu rashi palangal

  அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு,செவ்வாய்,வியாழன்  

  அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மற்றும் மஞ்சள் 

  வழிபடவேண்டிய தெய்வம் : துர்கை, முருகப்பெருமான்

  பரிகாரம் : செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், சனிக்கிழமைகளில் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் நற்பலன்களைத் தரும். மேலும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு செய்வதும் அற்புதமான பரிகாரம் ஆகும்.