அரசியல்

மாரிதாஸ் கெடு – திமுகவுக்கு இன்னைக்கு சாயந்தரம் இருக்கு கச்சேரி! சர்ச்சையை கிளப்பும் வீடியோ!

மாரிதாஸ்

‘அசுரன்’ படத்தைப் பார்த்து விட்டு பாராட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்ட ஒரு ட்விட்டர் பதிவு இத்தனை நாட்களாக தமிழக அரசியல் வட்டாரங்களில் கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. பஞ்சமி நிலங்களைப் பற்றி முக ஸ்டாலின் கருத்து சொன்னதும், பாமக ராமதாஸ் முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலம் தான் என்று அவர் பங்குக்கு பேசினார்.

maridhas

முரசொலி நிறுவனத்தின் நில ஆதாரங்களை ஆளாளுக்கு கேட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தை முதன் முதலில் வெளியில் கொண்டு வந்து, முரசொலி நிலம் பற்றி சர்ச்சையைக் கிளப்பிய மாரிதாஸ், அவரது முகநூல் பக்கத்தில், மீண்டும் முரசொலி விவகாரத்தை கையில் எடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இன்று மாலை முரசொலி பஞ்சமி நிலம் சார்ந்து என் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்படும் என்று திமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.

இன்று மாலை வெளியிடப்படும் வீடியோவில், செய்தியாளர்கள் முன் திமுக நிர்வாகிகள் நேற்று ஆடிய கீழ்த்தரமான நாடகம் என்ன என்பதையும் விளக்கிச் சொல்லப்படும். என்றும், முரசொலி இருக்கும் இடம் உங்களுடையது தான். இல்லை அது பஞ்சமி நிலம் தான் என்பதெல்லாம் தாண்டி ஒரு பெரிய கட்சி நேற்று உண்மையை வெளியே சொல்லாமல் வெக்கமே இல்லாமல் உண்மைக்கு புறம்பான விஷயத்தைப் பரப்பலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள மாரிதாஸ், இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வரும் விதமாக இன்று மாலையில், அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிடப்போவதாக கூறியிருக்கிறார்.

Related posts

தமிழ் ராக்கர்ஸை அழிக்க அரசால் முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு!

Admin

இனி 24 மணிநேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு!?

manikkodimohan

தீவிரவாதியாக மாறுகிறார் நடிகை சமந்தா

manikkodimohan
Open

ttn

Close